Thursday 8 March 2018

மூன்றாண்டுகள்   நினைவில்
தோழர்.சுந்தர்

கிட்டத் தட்ட 44வருடங்களுக்கு முன் முதல் சந்திப்பு மூதூர் சேனையூரில்  அதன் பின்னராக ஈழ விடுதலை இயக்கம் ஈழப் புரட்சி அமைப்பு என அரசியல் பயணம்  எரிமலை தர்க்கீகம் என விரிந்த இலக்கியமும் அரசியலும் கலந்த நகர்வுகள் .

மதுரையில் ஈழ மாணவர் பொது மன்றம் 1981 உலகத் தமிழாராச்சி மகாநாட்டின் போது ஈழப் பிரச்சினைகளை உலக தமிழ் சமூகத்தின் முன் கொண்டு சென்ற முன் நகர்வு சத்திரப்பட்டி முதல் தமிழ் நாட்டில் சந்து பொந்துகள் வரை ஈழப் பிரச்சினையின் தீவிரத்தை சொல்ல பொதுமை பாலம் இராசகிளி அச்சகம் என இலக்கியமும் அரசியலுமாய் இயங்கிய காலங்கள்.இவையெல்லாம் பொது வெளியில் பலருக்கு தெரியாத பக்கங்கள் தோழனே.

2006 ல் பாரிசில் உருவான தமிழர் திருநாள் பற்றிய தொடக்கப் புள்ளி இன்று உலகம் முழுவதும் பெரும் எழுச்சியாய் மாறியிருக்கிறது அதில் நானும் நீயும் முகுந்தனும் இன்னும் பல தோழமைகளும் சிலம்பும் அதன் வழி வந்து விரிந்த தொடர்புகளும்.
மேலைப் புலத்தில் இன்னியத்தின் அறிமுகமும் அது பற்றிய கருத்தாடலும் இன்று ஈழநாட்டியமாய் நம் கலாசார அடையாளமாய் முன்னகரும் பண்பாட்டுப் பரவலும்.உன் நினைவை உரக்கச் சொல்கிறது.

இந்த ஆண்டும் நீ இல்லாமலேயே பாரிஸ் தமிழர் திருநாள் கடந்து போனது நானும் முகுந்தனும் தனிமைப் பட்டுப் போனோமோ என்ற நினைவலைகளை கொண்டு வந்து சேர்த்தது.
எத்தனை எத்தனை நினைவுகள்

Tuesday 8 November 2016

#மூதூர்_மண்ணில் பிறந்த முதல் பாராளுமன்ற உறுப்பினர் அ.தங்கத் துரையின் வரலாறு.
_________09/02/2016__________
 மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் 1936/01/17 இல் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்பக் கல்வியை தி/கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.

நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம்; இரத்தினபுரி.கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற் கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

#மூதூர்_தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.

பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.

புன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.

அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றி யுள்ளார். வீதி அபிவிருத்திஇ பாலங்கள் நிர்மாணம்இ நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்திஇ சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்திஇ கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.

1971ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாவட்ட ரீதியிலான தரப்படுத்தலை த.வி.கூட்டனி எதிர்க்க முடிவுசெய்தபோது அது யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனையமாவட்ட மாணவர்களுக்கு வரப்பிரசாதமான சட்டம் அதை நாம் எதிர்க்க முடியாது என்று குரல் எழுப்பினார் அவ்வேளை அமிர்தலிங்கம்   இந்த இரண்டு துரையாலும் (மற்றையது இராஜதுரை)  எமக்கு ஒரே பிரச்சனைதான் என்று சொன்னாராம்.

மூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.

தமிழ்; சிங்களம்; ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத் துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரச துறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.

அமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.

இலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய 1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.

இதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும்,மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும்,சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.

இவ்வேளை த.வி.கூட்டணி  எந்த ஒரு எதிர்ப்பு போராட்டத்தையும் செய்யவில்லை.மண் பறிபோகிறது என்று இன்றுவரை கத்தும் இக்கட்சியினர் மூதுர் தொகுதி பறிபோகையில் தங்கத்துரைக்குத்தான் தொகுதி பறிபோகிறது என்று மெளனம் காத்தனர்.

இதற்கு மாற்றாக வவுனியாதொகுதியில் இருந்து பிரித்து கிளிநொச்சி தொகுதியை உருவாக்குவதும் அதனூடாக மூதூரில் இழக்கப்படும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பீடு செய்வது என்று சிறிமாவுடன் தமிழரசுக்கட்சி இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டது.

இதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையை அமிர்தலிங்கம் ஏற்படுத்தினார்.

இந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

பொதுமக்களினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை.

இருந்தும் அதே ஆண்டில் #மூதூர்_தொகுதி_தமிழர்_விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட #முஸ்லிம்_வேட்பாளர்_எஸ்_எம்_மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத்துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கு இழைத்ததுரோகத்தையும் மறந்து தொடர்ந்து கட்சி  உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.

மீண்டும் 1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ், முஸ்லிம்இ சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ்;  முஸ்லிம்; சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதார,கல்வி,கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.

1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.

இந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சம காலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட அப்பாவிமக்கள் ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

Sunday 10 July 2016

அண்ணன் தங்கத்துரையின் 19வது வருட நினவு நாள்

அண்ணன் தங்கத்துரையின் 19வது வருட நினவு நாள்  நிகழ்வு





 10.07.2016  சனிக்கிழமை பிறந்த மண்ணான கிளிவெட்டியில்  நடை பெற்றது.பெர்மளவில் கல்வியாளர்களும் பொது மக்களும் .கிழக்கு மாகாண சபி உறுப்பினர்கள் திரு.குமாரசாமி.நாகேஸ்வரன்,திரு.ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தமிழர்களின் அரசியல் நகர்வை ஒருபடி உயர்த்திய மாமனிதன் அருணாசலம் தங்கத்துரை

தமிழர்களின் அரசியல் நகர்வை ஒருபடி உயர்த்திய மாமனிதன் அருணாசலம் தங்கத்துரை -காயத்திரி நளினகாந்தன்



 அன்னார் தனது அரசியல் நகர்வை மிகவும் சாணக்கியமாகவும் துணிச்சலாவும் நகத்தினார்.குறிப்பாக தனது மக்களின் கல்விக்காக அவர்செய்த பணிகள் காத்திரமானவை மேலும்  தமிழ் சமூகத்தின் அரசியல் வராலாற்றிலே தான் சார்ந்த சமூகத்தின் அபிவிருத்திக்காக முதன்மையாக உழைத்த அரசியல்வாதிகளின் போற்றப்படவேண்டிய மனிதன் தங்கத்துரை அவர்கள் ஆவர்கள்.
அன்னார் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி என்னும் இடத்தில் பிறந்தார்.தங்கத்துரை அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை திஃகிளிவெட்டி அ.த.க பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக்கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார்.பின்னர் 1979-1980 இல் கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியை கற்று சட்டத்தரணியானார். எனினும் அவரது அரசியல் பயணத்தில் 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக்கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவுசெய்யப்பட்ட அ.தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார். அந்த நாள்; தொடக்கம் அவர் இறக்கும் வரை தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான உரிமைக்காகவும் மற்றும் அரசியல் விடிவுக்காகவும்  தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய மாமனிதன் அமரார் தங்கத்துரையாவார். தனது உரிமைக்காக போரடிக்கொண்டிருக்கும் சிறுபான்மை  இனத்தின் மக்கள் பிரதிநிதி எவ்வாறு செயற்படவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செயற்படுத்தியவர்.
குறிப்பாக கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திஇகுடியேற்றம் மற்றும் வீதி அபிருவித்தி பாலங்கள் நிர்மாணம் நீர்ப்பாசனத்துறை சார்;ந்த அபிருத்தி சமூகப்பொருளாதாரத்துறை சார்ந்த அபிவித்திகளை தனது திறமையான தலைமைத்துவத்தின் மூலம் திறம்பட செயற்படுத்தினார் மேலும் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரசதிணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதில் தங்கத்துரை அவர்களுக்கு நிகர் அவர்களே என்னும் அளவிற்கு சிறப்பான முறையில் செய்தார். மூம்மொழியிலும் தேர்ச்சிபெற்றதால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொதுமக்களுடைய பல்வேறு அரசதுறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக்கொடுக்கக் கூடியதாக இருந்தது. அமரர் தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970-1977 காலப்பகுதியில் பதவி வகித்துள்ளார். மேலும் தனது சொந்த ஊரான கிளிவெட்டிப்பிரதேசத்தில் சிங்களக்குடியேற்றத்தினை வெற்றிகரமாக தடுத்து மூதூரை பாதுகாக்க எடுத்த முயற்சியின் பயனாக இவர் கைது செய்யப்பட்டு 8 மாதங்கள் சிறையில் இருந்தார்
1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் அமோக ஆதரவைப்பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். திருகோணமலை மாவட்ட அவிருத்திச்சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அன்னார் மக்கள் தொண்டனாக திருககோணமலை மாவட்டதமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு சேவை செய்தார்.திருகோணமலை மாவட்ட சமூகப்பொருளாதார கல்வி கலாச்சார அவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக்கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.இருப்பினும் 1994 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இதன் மூலமாக அவர் தனது சேவைகளை விஸ்தரித்துக்கொண்டார்.குறிப்பாக பாடசாலைகளுக்க பௌதீக வளங்களைப்பெற்று கொடுப்பதில் பாரிய பங்கை மேற்கொண்டது மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் மீள்ச்சிக்கு கல்வியே சிறந்த வழி என முழுமையாக நம்பினார்.சுகாதர சேவையை மேம்பாடுத்தும் முகமாக பல கிராமங்களில் கிராம வைத்தியாசாலைகளை அமைத்தார்.
மேலும் தனது தரிசனப்பார்வையின் மூலமாக சாணக்கியத்தாலும் சிங்களக்குடியேற்றங்களை தடுத்தார். முதலாவதாக தொடர் சிங்கள குடியேற்றம் தமிழ் பகுதிகளில் ஊடுஉருவாது தடுக்கும் முகமாக தங்கபுரம் குமாரபுரம் குடியேற்றங்களை நிறுவி அலிஒலுவ வரை சிங்கள குடியேற்றத்தை மட்டுப்படுத்தினார். இதேபோன்று தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் குடியேற்றம் அமைக்க ஏதுவான காரணிகளை இல்லாது ஒழித்து குடியேற்றத்தை தடுக்க அவர் கிளிவெட்டியில் அமைத்த துணிந்து அழித்த அரசமர சரித்திரம் நாடறிந்த சம்பவமாகும். இதனால் இன்றும் கிளிவெட்டி தமிழ் மணத்துடன் மிடுக்காக மிளிர்வதற்கு வழிசமைத்தார் இவ்வாறு இவர் அமைத்த மிகிந்தபுரம் தொழில்நுட்பகல்லூரியானது திருகோணமலை  மாவட்ட இளம் சமூகம் நீண்டகாலமாக கடற்படைத்தளத்திலும் இலங்கை துறைமுக அதிகாரசபையிலும் கூலித்தொழில்படையாக படையெடுத்த சகாப்த்திற்கு முற்றுப்புள்ளி இட்டதுடன் தொழில் திறன் உடைய தொழில் நிபுணத்துவம் கொண்ட தொழிற்படை உருவாக்கத்திற்கு காரணமானார். மேலும் தொழில்நுட்பகல்லூரி மகிந்தபுரத்தில் உருவாக்கியதன்  மூலமாக அன்புவழிபுரம் வரோதயநகர் பகுதிகளில் சிங்களவர்கள் தொடராக குடியேற முடியாத தடுப்பு சுவராக மாறியுள்ளதை இன்று வியப்பின் விளிப்பில் நின்று பார்க்ககூடியதாக உள்ளது. இதேபோன்று கணேசாநகர் குடியேற்றமும் தனித்சிங்களகுடியேற்றத்தை தடுப்பதோடு பாலையூற்று தமிழ் கிரமாத்தின் தடுப்பு சுவராக அமைந்துள்ளது இவை இவரது தொலைநோக்கையும் ஆற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் பெருமையுடன் பகரும் சான்றுகளாகும்.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் அமைக்கவும் காரணகருத்தாகவும் இருந்ததோடு அதற்கான அமைவிடத்தை தனித்தமிழர் பிரதேசமான நிலாவெளி சாம்பல் தீவு பகுதிகளுக்கிடையிலான கோணெசபுரியில் தெரிவு செய்தமை இவர் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பைகட்டியம் கூறிநிற்கின்றது ஏனெனில் இப்பிரதேசம் நீண்டகாலமாக அடிப்படை வசதியற்ற பகுதியாகவே காண்பபட்டது.இங்கு வளாகம் அமைக்க தொடங்கிய காலம் முதல் தமிழ் மக்களது குடியிருப்புகள் அதிகரித்ததுடன் அடிப்படை தேவையான மின்சாரம் நீர் பாதையமைப்பு என்பன விரைவாக மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது இம்மக்களது வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றமை இத்திட்டத்தின் நீண்டகால பயன்பாடுகளாக அல்லது தாக்கங்களாக (ஐஅpயஉவ) நோக்ககூடியதாக உள்ளது ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த மனமாற்றத்தை (ளுநடக வசயளெகழசஅயவழைn) ஒருதலைவன் எவ்வாறு திட்டமிட்டு மேற்கொண்டார் என்பதற்கு இதை விட ஒரு உதாரணத்தை முன்வைக்க முடியாது என்றே கூறலாம்.



இருப்பினும் தமிழ்தேசியப்போரட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் தங்கள் கண்களை தங்களே குற்றிக்கொண்ட சம்பவங்கள் பல அதில் ஒன்றுதான் அமரார் தங்கத்துரை அவர்களின் மரணமும். இவர் 1997 ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஐந்தாம் திகதி திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டத்திறப்பு விழாவினை தொடர்ந்து கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் போது இக்கல்லூரி அதிபர் திருமதி இராஜஸ்வரி தனபாலசிங்கம் உட்பட 4 புத்திஜீவிகளும் கொலை செய்யப்பட்டார்கள். இம்மாமனிதனின் இடைவெளியை இன்றுவரை திருகோணமலை சார்பான மக்கள் பிரதிநிதிகள் எவரும் நிரப்பவில்;லை என்பது திருகோணமலை வாழ் தமிழ் மக்களின் துரதிஸ்டம் என்றே கூறமுடியும். இதற்கு சிறந்த உதாரணம் சம்பூர் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அவலநிலை குறித்து இது வரையில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளும் காத்திரமான செயற்பாட்டை முன்னெடுக்காது இருப்பதாகும். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் எமது தங்கத்துரை அவர்களின் வழிகோலியே அமையவேண்டும் மேலும் அவர் பெயர் திருகோணமலை தமிழ் சமூகம் வாழும் வரை வாழவேண்டும்.

அருணாசலம் தங்கத்துரை (சனவரி 17, 1937 - சூலை 5, 1997)

அருணாசலம் தங்கத்துரை (சனவரி 17, 1937 - சூலை 5, 1997)
 இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1970 முதல் 1977 வரை மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1994 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1997, சூலை 5 ஆம் நாள் திருகோணமலையில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.

பொருளடக்கம் 
1              கல்வி
2              பணி
3              அரசியலில்
4              கைது
5              படுகொலை
6              மேற்கோள்கள்
கல்வி
1936 ஆம் ஆண்டில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூரில் கிளிவெட்டி என்ற ஊரில் பிறந்த அருணாசலம் தங்கத்துரை தனது கல்வியை கிளிவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் 1979 ஆம் ஆண்டில் கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து 1980 இல் சட்டத்தரணியானார்.

பணி
இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எழுத்தராக நியமனம் பெற்ற தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார். கொழும்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய போது, இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப் பட்டதை அடுத்து 1970 ஆம் ஆண்டில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரசியலில்
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தீவிர அரசியலில் இறங்கினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அப்போது இருந்த மூதூர் தொகுதில் 1970 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்கத்துரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் அக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டில் மூதூர் தேர்தல் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக மாற்றப்பட்டது. சிங்கள மக்களுக்காக சேருவில என்ற புதிய தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி, தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய இலங்கை சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது. இதனால் தங்கத்துரை 1977 ஆம் ஆண்டு தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியவில்லை.

கைது
தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தில் இவரையும் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் எட்டு மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் விடுதலையானார்.

1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரங்களை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியைத் துறந்தார்.

1994 இல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு அம்மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

படுகொலை
1997 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்குபற்றிய போது இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். இவருடன் கல்லூரி அதிபர், உட்பட ஐவர் உயிரிழந்தனர்[1][2][3]. தமிழீழ விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக பன்னாட்டு மன்னிப்பகம் குற்றம் சாட்டியது
தமிழ் விக்கிபீடியா

நீங்காத நினைவுகள்!

மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களைப்பற்றிய எனது நீங்காத நினைவுகள்!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் – பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களைப்பற்றிய எனது நீங்காத நினைவுகள்.
ஜூலைமாதம் 5ஆந்திகதி – சனிக்கிழமை இரவு 8.05 மணி ரிஎன்எல்(TNL) தொலைக்காட்சியில் ராமாயணம் திரையிடப் படுகிறது. சிவதனுசு வில் ஒடிக்கப்பட்ட செய்தி, ராமர் சீதை திருமணம் பற்றிய செய்தி – இவற்றைத் தாயிடம் கூற பிள்ளைகள் புதிர் போடுகிறார்கள்! என்ன செய்தி என்று அறிவதில் பதட்டமான ஒரு நிலையில் – தொலைபேசியில் கஹவத்தையிலிருந்து நண்பர் ஒருவர் திருமலை தந்திரதேவா சுவாமி நாளை ஞாயிற்றுக்கிழமை பலாங்கொடை, நீலகாமம், தலுக்கல்லைப் பகுதிகளுக்கு வருகிறார். கட்டாயம் வரவேண்டும் என்ற அழைப்பு – சரி வருகிறேன் என்று கூறி முடிக்கு முன்பே மற்றைய தொலைபேசியில் திரு. தங்கத்துரை கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சிச் செய்தி வரவும் மறுதொலைபேசியில் வரமுடியாது – அதிர்ச்சியான செய்தி என்று கூறித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு திருமலைக்குத் தொடர்பை ஏற்படுத்தி விசாரித்தால் செய்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இதனிடையில் 9.00 மணி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியிலும் தகவல் வெளியிடப்பட்டது. திரு. ஜோசப் பரராஜசிங்கமும் பாரியாரும் கூட்டணி அலுவலகத்திற்கு வந்து தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களைச் சந்தித்து இதுபற்றி நீண்டநேரம் கதைத்தவண்ணமிருந்தனர். ஏற்கனவே அனுபவத்தைப் பெற்று இவ் இம்சையின் கொடுமையை உணர்ந்த தலைவர் சிவா ஐயா கண்கள் குளமாக வேதனையுடன் மௌனமாக இருந்தார். பல வெளிநாடுகளிலிருந்தம் செய்தி அறிந்து பலர் இரவிரவாகத் தொடர்பு கொண்டவண்ணம் இருந்தனர்.
3.7.1997 சென்னையிலிருந்து வந்த திரு. தங்கத்துரை பா.உ அவர்கள் 4.7.97 வெள்ளிக்கிழமை தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு எம்முடன் பேசினார்கள். 5.7.97 சனிக்கிழமை காலையில் வாகனத்தில் திருமலை சென்று அன்றிரவு ஸ்ரீ சண்முகா இந்த மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்புவிழாவின் நிறைவில் குண்டுத் தாக்குதலில் பலியானார். கூடவே அவருடன் அதே கல்லூரியின் அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், அதே கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர் திரு. பெ.சி. கணேசலிங்கம், திருக்கடலூர் நாமகள் வித்தியாலய அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் திரு. கா. சீவரத்தினம் ஆகியோர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த பொறியியலாளர் திரு. வே. ரட்ணராஜா அவர்கள் இரண்டு நாட்களின் பின்னர் மரணமடைந்தார். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சமுதாயம் ஒருபோதும் இப்படிப்பட்ட மிருகத்தனமான படுகொலைகளை ஏற்க முன்வரமாட்டார்கள்.
எளிமை அன்பு பொறுமை உண்மை நியாயம் துணிவு இரக்கம் என்பவற்றிற்கு இலக்கணமாக சகிப்புத் தன்மைக்கு உதாரண புருஷராக எந்நேரமும் புன்சிரிப்புடன் இளவயதினர் அனைவரையும் தம்பி என்று அன்பு ததும்ப அழைக்கும் திரு. அ. தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எனது எண்ணங்களால் நம்பக்கூடிய ஒன்றாக இதுவரை புலப்படவில்லை.
கடந்த 8 வருடங்களாக அவருடன் கொண்டிருந்த அன்புப் பிணைப்பு ஏதோ வருடத்திற்கோரிருதடவை வழமைபோல இந்தியா போய் வருபவர் தற்போதும் இந்தியா போய்விட்டார். நிச்சயம் திரும்பி வருவார் என்றே எண்ணத் தோன்றுகிறது! எந்நேரமும் எம்முடனேயே இருக்கின்ற உணர்வு – என்னைவிட்டு இன்னும் மறையவில்லை.
உயரத்தில் சற்றுக் குறைவானாலும் – நிமிர்ந்த நடையும் மேவியிழுத்த சிகையும் கூர்மையுடன் ஆழம் பார்க்கும் விழியும் நெற்றிப்புரவ அசைவுகள் கொண்ட பேச்சும் எந்நேரமும் முறுவல் பூத்த இன்முகமும் எளிமையும் காந்தீயமும் நிறைந்த – 4 முழ வேட்டியும் அரைக் கைச் சேட்டும் அணிந்த உருவமும் – சிந்தனையிலிருக்கும்போது இமைக்காத விழியும் மௌன நிலையும் காலையில் எழுந்ததும் தனக்கே உரித்தான ஒரு தடித்த ம்..ம்.. என்ற செருமலும் (தான் எழுந்துவிட்டதை எமக்குத் தெரிவிக்கும் ஒரு அறிவிப்பு) சிலரைத் தொலைபேசியில் அழைத்தபின் சிரிக்கும் பெரியதொரு அஹ்..ஹ்..ஹா என்ற அசுரச் சிரிப்பும் நெருங்கிப் பழகுவோர் சிலருடன் அன்பாக மச்சான் என்றழைக்கும் விதமும் – இவை என்றுமே அவரை எண்ணத் தோன்றியபடி இருக்கவே செய்யும்.
1989ஆம் ஆண்டு ஜூலை 13இல் படுகொலை செய்யப்பட்ட திருவாளர்கள் அ. அமிர்தலிங்கம் வெ. யோகேஸ்வரன் ஆகியோரின் மறைவுக்குப் பின் எங்களுடனேயே வந்து தங்கியிருந்து – தகர்த்து நொருக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை தூக்கி நிலை நிறுத்திய – ஒரு கற்றூணாக அர்ப்பணிப்புச் செய்த அவரின் தன்மையை எண்ணிப் பார்க்கின்றேன். அன்று தொட்டு படுகொலைசெய்யப்பட்ட நாள்வரை தனது பணியை அமைதியாக – சலசலப்பில்லாமல் – விளம்பரம் செய்யாமல் நிதானமாகக் கூடிய அக்கறையுடன் முன்னெடுத்துச் சென்றதை நினைவுகூருவது என் கடமையாகிறது!
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக திருமலை மாவட்டத்தில் சிறப்பாகப் பின்தங்கிய பிரதேசங்களுக்கத் தன்னாலான அனைத்தையும் இரவு பகல் பாராது கடமையுணர்வும் – பற்றுறுதியும் கொண்டு செயற்கரியனவற்றைச் செய்தார். அதனால்தான் 1970ஆம் ஆண்டு மூதூர்த் தொகுதியில் இரண்டாவது அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டபோது பெற்ற வாக்குகளை விட(19,787) 24 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை மாவட்டத்தில் 1994ஆம் ஆண்டில் கூடிய விருப்புவாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையையும்(22,409) பெறுகின்றார். 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வாக்ககள் 44,692. திரு. தங்கத்துரை அவர்களே சபைத் தலைவராக இருந்தார்.
1991ஆம் ஆண்டு நாள் சரியாக எனக்கு ஞாபகமில்லை. வடக்குக் கிழக்குப் பகுதியின் புனரமைப்பு புனர்நிர்மாணங்களுக்காக வெளிநாட்டு உதவி ஒன்று கிடைக்கவிருந்த சமயத்தில் ஒரு பெரிய திட்டம் (Project ) ஒன்றை நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஏறக்குறைய 2.30 மணிவரை தனியாக இருந்து ஆங்கிலத் தட்டச்சில் அதைத் தயார் செய்து முடித்ததை நினைவுக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அவரது வழிகாட்டலில் சில வரைபடங்களை நாமே கீறிக் கொடுத்தோம். நானும் எனது நண்பன் சபாபதி அவர்களும் அதைச் செய்து முடித்தோம். (இக்கட்டுரை எழுதியது 1997 காலப்பகுதியில் – அவர் பதுளை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்தார் – 1990 களில் நாம் கொழும்பில் இந்து சமய ஒற்றுமைப் பேரவையை நடத்திய காலங்களில் அவர் அதன் பொருளாளராக இருந்தவர் மலையகத்தைச் சேர்ந்த அவர்; எமது மறைந்த தலைவர்கள் அனைவருடனும் அன்னியோன்னியமாக பழகியதையும் இன்று நான் சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும் என நினைக்கின்றேன்.) வடக்கு கிழக்கு நெடுஞ்சாலைகளில் செப்பனிடப்படவேண்டிய பகுதிகள், மின்சாரம் வழங்க வேண்டிய பகுதிகள், பாடசாலைகளுக்கான புதிய கட்டடங்கள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், மாணவர் ஆசிரியர் விடுதிகள், திருத்தப்படவேண்டிய குளங்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் வசதிக்கான கிணறு அமைத்தல் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
கல்விக்கும் கல்வி வளர்ச்சிக்கும் – ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் பாடசாலை வளங்களை அதிகரித்தல் போன்ற சகல பணிகளிலும் அவர் கூடிய அக்கறை காட்டிவந்தார்.
கைது செய்யப்பட்டுக் காணாமற் போனோர் பற்றிய விபரங்களைப் பெற்று அவற்றைத் தொடர்புடைய ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை இவர்களுடன் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க அல்லது வழக்குகள் ஒழுங்கு செய்து அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப் பெரிதும் உழைத்தார். எமது அலுவலகத்தில் இந்தப் பத்திரங்களின் பிரதிகள் இன்றும் அவரது மனித உரிமை மீது கொண்ட மதிப்பை உணரச் சான்றுகளாக உள்ளன.
அவருடைய தேசிய அடையாள அட்டையில் தொழில் என்ற பகுதியில் கமம் என்று இருக்கக் காணப்பட்டது. நான் ஏன் நீங்கள் நீர்ப்பாசன இலாகா உத்தியோகத்தர் அல்லது சட்டத்தரணி என்று குறிப்பிட்டிருக்கலாமே என்று ஓர் நாள் சொன்னதற்கு – அது எமது பரம்பரை பரம்பரையான தொழில் அதை நாம் ஏன் குறிப்பிடுவதில் தயக்கம் காட்ட வேண்டும் என்று சொன்னார்.
மிகவும் எளிமையும் அன்பும் கொண்ட அவர் 1994இல் தேர்தலில் வெற்றிபெற்றபின் 1995 மார்ச்சில் மாதிவெலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதிக்குச் சென்றார். அதுவரை சுமார் 6 வருடங்களாக நாமே அவருக்கும் ஏனைய அலுவலகத்தில் தங்கியிருந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களுக்கும் மூத்த துணைத்தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கும் தேனீர் தயாரிப்பதிலிருந்து – கடையில் போய் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதுவரை நாமே செய்தோம். வீட்டில் சமையல் செய்ய ஒருவர் இருந்தபோதும் பெரும்பாலும் கற்பகத்திலும், சாந்தி விஹாரிலும் – கிறீன்லன்ட் மற்றும் வெள்ளவத்தை மயூரியிலும்தான் சாப்பாடு. சாப்பாட்டு விடயத்தில் இதுதான் வேண்டும் என்று ஒரு நாளும் யாரும் சொன்னது கிடையாது. இதில் அமரர் தங்கத்துரை அவர்களுக்கு வெறும் தேனீர் தான் சீனியில்லாமல் கொடுப்பது வழக்கம். மத்தியகுழுக் கூட்டங்களின்போது (ஒவ்வொரு கூட்டங்களும் பலமணிநேரம் நடைபெறும்) காலையில் 10.00 மணிக்கு தேநீர் – மதிய உணவு பின்னர் மாலையில் வடையுடன் தேநீர் ஓரிரு தடவைகள் இரவு உணவும் கொடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னரும் முன்னரைப் போலவே நடந்து தனியாகவும் – பஸ்வண்டிகளிலும் பிரயாணம் செய்வார். தனது பாதுகாப்பைப்பற்றி சிறிதேனும் அவர் கவலைப்படவில்லை. நீதி நியாயம் உண்மை உள்ளவன் ஏன் கவலை கொள்ள வேண்டும் – அவனுக்கு என்ன பயம் என்று அடிக்கடி சொல்லுவார். ஒரு தடவை திருமலை செல்லப் புகையிரத நிலையம் போவதற்கு 138 இலக்க பஸ் வண்டியில் அவர் முன்பு ஏற பின் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏற அவரை வழியனுப்பி வைத்ததும் மறக்க முடியாத சம்பவம்.
அவரது அறையில் – காலைக்கடன்களை முடித்துவிட்டு ஏறக்குறைய அரை மணிநேரம் தியானத்தில் அமர்வார். காலையில் வாக்கிங்போகும் அமைச்சர் மஜீத் நேரே அவரது அறைக்குள் போய் அவர் தியானத்திலிருந்தால் பரவாயில்லை மேணை! அவர் தியானம் முடிந்த பிறகு கதைக்கலாம் என்று சொல்லி அவருக்கு முன்பாக கதிரையில் அமர்ந்த அவரையே பார்த்தபடி இருப்பதும் மறக்கமுடியாது.
தனது தந்தையார் அருணாசலம் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்து ஓரிரு நாட்கள் எமது அலுவலகத்தில் தங்கியிருந்த பின் அவரை திருமலைக்கு அனுப்பி வைப்பதற்காக அதிகாலை புகையிரத நிலையத்துக்குச் சென்று வழியனுப்பிய அன்று அவரது நடவடிக்கைகள் மிக வித்தியாசமாக இருந்தது! புகைவண்டியிலிருந்த பலரும் அவரின் கையைப் பிடித்து இழுத்து தங்களுடன் வரும்படி கேட்டு தொல்லை கொடுத்தபோது வேலைகள் நிறைய இருக்கின்றன. பின்பு கட்டாயம் வருவேன் என்று சொல்லி அவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பல நிமிடநேரம் சிரித்து அளவளாவியதையும் மறக்க முடியவில்லை. அவருக்கு முஸ்லிம் சிங்கள நண்பர்கள் எனப் பலர் இருந்தனர். சகலரையும் மதித்து அவரவர் கொள்கை – இலட்சியங்களுக்கு இயைந்த போக்கினைக் கடைப்பிடிக்கும் அவரது தாராள குணம் ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தினால் அவர் – நீதி கோருபவன் தான் நீதி வழங்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை எமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவார்.
(மீதி பின்னர்.
தங்க முகுந்தன்

அண்ணன் தங்கத்துரை

அண்ணன் தங்கத்துரை

05.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வு முடிவுற்றதும் வீடு நோக்கி திரும்புகையில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.அன்றைய தினம் மேற்படி கல்லூரியில் சமகாலத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் கைக்குண்டு தாக்குதலில் மேற்படி கல்லூரி அதிபர் உட்பட ஐவர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத் துரை தனது ஆரம்ப கல்வியை திஃ கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.

நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அ. தங்கத்துரை அவர்கள் அப்போது மூதூர் தொகுதி தமிழ் பிரமுகர்களும் மக்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கி 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார்.

பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்கள் பணியே மகேசன் பணி என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டு மூதூர் தொகுதி மக்களுக்கு அன்றைய காலகட்டத்தில் அளப்பரிய சேவையாற்றினார்.புன்னகை ததும்பிய சிரித்த முகத்துடன் எவரையும் வரவேற்று அவர்களுடன் மனம் விட்டு பேசி அவர்களின் துயர் துன்பங்களை அறிந்து சேவை செய்யும் இயல்புடைய அரசியல்வாதியாக அ. தங்கத்துரை விளங்கினார். இவர் எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் கோபம் கொண்டு பேசியது கிடையாது. எதிரியையும் நேசித்து நன்மை புரிந்தவர் இவர்.

அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1970 – 1977 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது மூதூர் தொகுதியின் அபிவிருத்திக்காக பல வகைகளில் சேவையாற்றியுள்ளார். வீதி அபிவிருத்தி, பாலங்கள் நிர்மாணம், நீர்ப்பாசனத் துறை சார்ந்த அபிவிருத்தி, சமூகப் பொருளாதாரத் துறை சார்ந்த அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்த அபிவிருத்தி முதலானவற்றை அப்போது மூதூர் தொகுதியில் மேற்கொண்டார்.
மூதூர் தொகுதியில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் அ. தங்கத்துரை தனது பதவிக் காலத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டார்.தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பேசவும் எழுதவும் அ. தங்கத்துரைக்கு ஆற்றல் இருந்தமையால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொது மக்களுடைய பல்வேறு அரசதுறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.

அமரர் அ. தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970 – 1977 காலப் பகுதியில் பதவி வகித்துள்ளார்.இலங்கை அரசின் தேர்தல் தொகுதி நிர்ணய நடவடிக்கையினால் இரட்டை அங்கத்துவப் பாராளுமன்ற தேர்தல் தொகுதியாகவிருந்த மூதூர் தேர்தல் தொகுதி 1977 இல் ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இதேவேளையில் திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களின் நலன் கருதி அன்றைய 1970 – 1977 அரசினால் சிங்கள மக்களுக்காக புதிய சேருவில தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.இதன் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.

இதனால் அமரர் தங்கத்துரையை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியாத நிலையேற்பட்டது.இந்நிலையில் 1970 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த அமரர் பா. நேமிநாதன் அவர்கள் 1977 இல் திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதை தவிர்த்து அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களை திருகோணமலை தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிடச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

பொதுமக்களினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவினர் சிலரதும் மேற்படி முயற்சி கைகூடாததால் அமரர் அ. தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவில்லை. இருந்தும் அதே ஆண்டில் மூதூர் தொகுதி தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர் எஸ். எம். மக்கீனுக்கு ஆதரவாக அ. தங்கத்துரை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில் இவரையும் பொலிசார் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவரைக் கைது செய்ததால் இவர் திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் (8) எட்டு மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து விடுதலையானார்.
1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவர் வேட்பாளராகப் போடியிட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அ. தங்கத்துரை மக்கள் தொண்டனாக திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு சேவை செய்தார். திருகோணமலை மாவட்ட சமூகப் பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியை துறந்த இவர் திருகோணமலை மாவட்ட மக்களுடன் மக்கள் தொண்டனாக திருகோணமலையிலே வாழ்ந்தார்.1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வந்தார்.இந்நிலையில் தான் 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐந்தாம் திகதி (05.07.1997) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவினை தொடர்ந்து பயங்கரவாதியினால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அமரர் தங்கத்துரை மரணித்த போதும் அவர் திருகோணமலை மாவட்டத்திற்கும் மாவட்ட மக்களுக்கும் செய்த சேவைகள் மக்கள் மனதைவிட்டு நீங்கவில்லை. அன்னாரது சேவைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துள்ளன

கோ.திரவியராசா