Sunday 10 July 2016

அமரர். தங்கத்துரை

அமரர். தங்கத்துரையின் 19வது நினைவுநாள் இன்று (05.07.2016)
SANJEEVAN THURAINAYAGAM·TUESDAY, 5 JULY 2016
அமரர். தங்கத்துரையின் 19வது நினைவுநாள் இன்று (05.07.2016)

அமரர் தங்கத்துரையின் இழப்பு திருகோணமலை  மாவட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்ட நிரப்ப முடியாத இடைவெளியாகும். இன்று(5) அவரது 19வது  நினைவு தினமாகும்.
  திருகோணமலைமலை மாவட்ட மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரானவர்  அருணாசலம் தங்கத்துரை.இவர்  இறந்தும் வாழும் நேயமிக்க அரசியல் தலைவராகும். 17இ 01.1936 ஆம் ஆண்டில்இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூரில்  பழம் பெரும் பூர்வீககிராமமானகிளிவெட்டி என்ற கிராமத்தில் பிறந்த அருணாசலம் தங்கத்துரை தனதுகல்வியை கிளிவெட்டி அரசினர் தமிழ்க் கலவன்பாடசாலையிலும்இ மட்டக்களப்புவந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும்இ பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். அவரது தலமையில் பிரசித்திபெற்ற திருகோணமலை திருக்கரசையம்பதி என புராணபாடலில் குறிப்பிடப்படும் வரலாற்றுச்சிறப்புமிகு மூதுார் கங்குவேலி அகஸ்தியர் ஸ்தாபனத்தின் பரிபாலன மாவட்ட அமைப்பொன்று இயங்கியமையையும் குறிப்பிடத்தக்கது.

 பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் 1979 ஆம் ஆண்டில் கொழும்பு சட்டக்கல்லூரியில் இணைந்து 1980 இல் சட்டத்தரணியானார். இலங்கை நீர்ப்பாசனத்திணைக்களத்தில் எழுதுனராக நியமனம் பெற்ற தங்கத்துரை சோமபுரம்இஇரத்தினபுரிஇ கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார். கொழும்பில்நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய போதுஇ இலங்கையில் சிங்களம்மட்டும் சட்டம் கொண்டு வரப் பட்டதை அடுத்து 1970 ஆம் ஆண்டில் அரசசேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
 அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தீவிர அரசியலில்இறங்கினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து இரட்டை அங்கத்தவர்தொகுதியாக அப்போது இருந்த மூதூர் தொகுதில் 1970 ஆம் ஆண்டில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். தங்கத்துரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின்வாலிப முன்னணி தலைவராகவும் அக்கட்சியின் மலையக தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
1977 ஆம் ஆண்டில் மூதூர் தேர்தல் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தேர்தல்தொகுதியாக மாற்றப்பட்டது. சிங்கள மக்களுக்காக சேருவில என்ற புதிய தேர்தல்தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. திருகோணமலைமாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதிஇ தமிழ் மக்களைபெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல்தொகுதி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட தேர்தல்தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களைபெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் அன்றைய இலங்கைசுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது. இதனால் தங்கத்துரை 1977 ஆம்ஆண்டு தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடமுடியவில்லை

தொடர்ந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினராகவும் ஆதரவாளராகவும்இவர் செயற்பட்டார். இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரானகிளிவெட்டி கிராமத்தில்  அரச மரம் வெட்டியதான பிரச்சனை சம்பவத்தில்இவரையும் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுதிருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் எட்டு மாதங்கள் சிறையில்இருந்து பின்னர் விடுதலையானார்.
1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலைமாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டுதிருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக்கலவரங்களை அடுத்துதமிழர் விடுதலைக் கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாகஇவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியைத்துறந்தார்.
1994 இல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில்போட்டியிட்டு அம்மாவட்டத்தில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுதிருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இதன்போது தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரான இரா .சம்பந்தனும்போட்டியிட்டிருந்தார். இத்தேர்தலில்  மாவட்டத்தில் அதிகம் வாக்குகளை தங்கத்துரையே பெற்றார்.
அவரது அரசியல் காலத்தில் அவர் முக்கியமாக அவரது நீண்ட அரசியல் அனுபவம் இகாரணமாக  நாட்டின் இனவாத அரசியல்சூழலைக்கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் கல்வியிலேயே முக்கிய கவனம் செலுத்தவேண்டும் என்பதில் இறுதிக்காலத்தில்  அக்கறை கொண்டிருந்தார்.
அதனாலோ என்னவோ கல்விக்கான  நிகழ்விலேயே அவரதுஇறுதி மூச்சு பல கல்வி மான்களையும் கூடவே கூட்டிச் சென்றது.திருகோணமலை தொழில்நுட்பக்கல்லுாரியை திருகோணமலைக்கு கொண்டுவந்தார். கிளிவெட்டிப்பாலம் கட்டகாரமாணார்.நகரிற்கு அருகில் உள்ள சங்கமம் கிராமத்தில் தமிழ்மக்களையும் மாதிரிகிராம திட்டத்தில் உள்வாங்கப்பாடுபட்டார். பல ஆசிரியர்களை கல்வி அதிகாரிகளை உள்வாங்க உழைத்தார் ஆனால் அவர்கள் அவரை மறந்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இன்றும்  உள்ளன.?
இவர்பற்றி முன்னாள் கல்வி திணைக்கள அதிகாரியாகவிருந்த தற்போதைய  திருக்கோணேஸ்வரர்ஆலய பணிப்பாளர்சபை தலைவர் ஒருநிகழ்வில் குறிப்பிடுகையில்இ ”அண்ணன் தங்கத்துரை அண்ணன்  நிர்வாக விடயங்களில் புகுந்து சாதிக்கும்வல்லமையை கொண்டிருந்தார்.நியமனங்களில் கல்வி வழங்களை பெறுவதில் எம்மை அவர் அக்காலத்தில்  பலமாக பயன்படுத்தினார்.எனக்குறிப்பிட்டார்.
இவர்பற்றி இவரது பாடசாலை நண்பரான பேராசிரியர் அருணாசலம்  இவரது நினைவு நிகழ்வில் குறிப்பிடுகையில்.”நான் திருகோணமலை நகரைச்சார்ந்தவன் என்ற வகையில் நானும் அவருடன் இளமைக்காலத்தில் வந்தாறுமூலை மகாவித்தியாலயத்தில் படித்தேன்.
 அப்போது எமது மாவட்டத்தைச்சார்ந்த பல நண்பர்கள் படித்தார்கள் .அவர்கள் அங்கு தங்கிப்படித்த காலத்தில் அவரகளுக்குதாயன்போடு கல்வி கற்க  தங்கத்துரை உதவுவதை நான் பார்த்திருக்கின்றேன். அவர் தான் படித்துக்கொண்டு மற்றவர்களையும் விடுத்தியில் படிக்கதுாண்டி வந்தார்.நேரத்தோடு எழும்பி எம்மையும் எழுப்புவார்.அப்போது அங்கு தங்கிப்படித்த திருகோணமலை தென்னமரவாடியைச்சார்ந்த சக ஏழைநண்பனொருவனை நாம்  மரணம் மூலமாக  இழக்க நேர்ந்தது அவ்விடயம் அவரை வெகு வாக பாதித்தது.
இவ்வாறு அவர் இழமைக்காத்திலும் தொண்டுள்ளம் கொண்டவராகவும் கல்விபற்றிய தெளிவான பார்வையுள்ளவராகவும் இருந்தார்.அவரை  எனது நண்பரென்பதில் பெருமையடைகின்றேன்அவரின் இழப்பு இந்நத மாவட்டமக்களின் கல்வி எதிர்காலத்திற்கான இழப்பாகும்” எனச் சொன்னார்.
அவரிடம் பலர் வேலை தேடி வருவார்கள் . 1994பாராளுமன்றக்காலத்தில்  ஒருமுறை  மூதுாரில் இருந்த அவரது மக்கள் சந்திப்ப அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் கூறினார் ”நான் கல்வி தொடர்பாக பல மாற்றங்களை எமது மக்களுக்கு ஏற்படுத்த சி்ந்தித்து செயற்பட்டு வருகின்றேன்வேறு விடயங்களில் நான் அதிகம் நாட்டம் கொள்ள வில்லை.ஏனெனில் எமது பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வரும் என்ற அறிகுறியில்லை. எமது இனம் கல்வியில் முன்னேறினால்தான் நிலைக்கமுடியும் .மீழ முடியும் எனவும் சொன்னார்..
அதற்கான பாரிய திட்டங்களையும் வைத்திருந்தார் ஆனால் தமிழர்களின் தலையெழுத்தும் தமிழர்களின் அரசியலின் பிற்போக்குத்தனமும்  தலைவிரித்தாடும் சுயநலமும்  அவரை சாகடித்துவிட்டது.அந்தஅனுபவம் கூட இன்னும் எமக்கு பிற்போக்குத்தனத்தை போக்க முன்வரவில்லை. பிற்போக்குவாதிகள் உணர்ந்து கொள்வதாகவில்லை.
அவரது ஊரான கிளிவெட்டிக்கருகாமையில் உள்ள குமாரபுரம் கிராம இராணுவப் படுகொலை1996.02.11 இல் இடம் பெற்று 26 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு இளம் யுவதிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பற்றிய கொரூரம் கண்டு குமுறினார்.
சர்வதேசம்வரை அதனைக்கொண்டு சென்று மூதுாரில்  மூன்று தினங்களில் நீதிமன்றத்தின் வாயிலி்ல் குற்றவாழிகளை அணிவகுப்பில் நிறுத்தி அடையாளம் காணக்காரணமானார்.நீதிபதிசுவர்ணராஜா முன்னிலையில் இதுநடந்தது.அப்போது மூதுார் நவரெண்டமண்டபத்தில் நாம் பேரவை சார்பில் மூன்று நாட்கள் இரத்தக்கறையுடன் வந்த அந்தநுாற்றுக்கணக்கான மக்களை தங்கவைத்து உணவளித்தது விசாரணைக்கு உதவியமை மறக்கமுயாத நிகழ்வாகும். இன்று 20 ஆண்டுகள் கழித்தும் அந்த மக்களுக்கு தீர்வும் வரவில்லை. நிவாரணமும் வரவில்லை.அதனைக்கண்டுகொள்வாருமில்லை.
 ஆனாலும் அந்த வழக்கு அவரது இழப்பின் பின்னர் இன்று வரை அனுராதபுரம் மாற்றப்பட்டு  இழுபறிக்கு மத்தியில் நடைபெற்றுவருவதுஇ அவர்  இல்லாமையை பற்றி  பாதிக்கப்பட்ட மக்களை உணரவைத்துள்ளன.பேசவைத்துள்ளன.
  இவர் அரசியல் பலமிக்க  செயற்பாடுடைய ஒருவர் என்பதனை பலமுறை நிரூபித்துள்ளார். உதாரணமாக மூதுார்  பாலத்தடிச்சேனையில் ஒரு தபால்நிலயம் அரசதரப்பால் திறக்கப்படுகின்றன. தனது அரசியல் தொண்டர்களான  பட்டித்திடல் மக்களின்  நீண்டகால கோரிக்கையா ன தபால்நிலையக்கோரிக்கயை மறுதலிக்க அது திறக்கபடுகின்றன.
தொண்டர் அமரர்  த.யோகேந்தின் ஓடுகின்றார் அண்ணே இதென்ன எமக்கு துரோகம் செய்துவிட்டிர்கள் என்றவுடன்இ பொறுங்கள் என்ற அவர்  சிலமாதங்களில் ஒருகிலோமீற்றர் இடைவெளியில் பட்டித்திடலிலும் ஒரு தபால்நிலையத்தை ஆழும் தரப்பை எதிர்த்து திறக்கவைத்தார்.
இன்றும் அது இயங்கிய வண்ணமுள்ளன.இவ்வாறான செயல்திறன்மிக்க ஒரு  அனுபவம் கொண்ட அரசியல்வாதி அரசியில் சூழ்சிகள் காரணமாக கொலையானார். அந்த இழப்பு திருகோணமலை மாவட்டத்திற்கு அபிவிருத்தி பற்றி யோசிக்கும் இந்தக் காலத்தில்  இடைவெளி நிரப்பமுடியாத இழப்பு என்பதனை மக்கள் உணர தலைப்பட்டுள்ளனர்.
”ஒற்றுமையில்லாக்குடி ஒருமிக்க கெடும்” என்ற வாக்கிற்கிணங்க உள்ளுார் தலமைகள் அவ்வாக்கினை  நிரூபிக்க கங்கணம் கட்டி நிற்கின்றனர் .தலமைகள் கைகட்டி வாய் பொத்தி மௌனிகளாக  தெரிந்தும் தெரியாதவர்களாக கண்ணைமூடி பால்குடிக்கும் பூனைகளாக வுள்ளனர்.
1997 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துமகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்குபற்றியபோது நடந்தகுண்டுதாக்குதலில் அமரர் தங்கத்துரை   படுகொலை செய்யப்பட்டார்.இது அரசியல் ரீதியில் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட பாரிய இழப்பிற்கான அடித்தளங்களில்ஒன்றாகும். இவருடன் கல்லூரி அதிபர்இ பொறியிலாளர்  உட்பட ஐவர்உயிரிழந்தனர். அந்த நகழ்வின் பிரதிபலனை திருகோணமலை மண் இன்று அனுபவிக்கின்றது. என பலரும் சொல்கின்றனர்.
அந்தவகையில் ஒரு செயற்றிறன் மிக்க தலைவரை இழந்த திருகோணமலை மக்கள்  இன்று கவலையில் உள்ளனர்.அவரால் தனிப்பட்ட இலாபம் அடைந்தவர்கள் பேசாமடைந்தைகளாக மௌனித்து நாம் சுயநலமானவர்கள்தான் என்பதனைபல வருடங்காள நிரூபித்து நிற்கின்றனர்.

அவரது வரலாறும் செயற்பாடும் இளத்தலைமுறைக்கு படிப்பனைக்கான விடயமாகும். அந்த சிறந்த முன்னுதாரணமான  அரசியல் வாதியின் நினைவு தின நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை 10.07.2016 அன்று மூதுார் கிளிவெட்டி மகாவித்தியாலயத்தில் காலை 10.00மணிக்கு நடைபெற ஏற்படாகியுள்ளது. இவரது இந்நிகழ்வில் கலந்து கொண்டு வரும் காலத்திலாவது எமது எதிர்காலம் தொடர்பாக மாற்றி யோசிக்க முயற்றிசிப்போம்.?


..பொன்சற்சிவானந்தம்

No comments:

Post a Comment