Sunday 10 July 2016

தமிழர்களின் அரசியல் நகர்வை ஒருபடி உயர்த்திய மாமனிதன் அருணாசலம் தங்கத்துரை

தமிழர்களின் அரசியல் நகர்வை ஒருபடி உயர்த்திய மாமனிதன் அருணாசலம் தங்கத்துரை -காயத்திரி நளினகாந்தன்



 அன்னார் தனது அரசியல் நகர்வை மிகவும் சாணக்கியமாகவும் துணிச்சலாவும் நகத்தினார்.குறிப்பாக தனது மக்களின் கல்விக்காக அவர்செய்த பணிகள் காத்திரமானவை மேலும்  தமிழ் சமூகத்தின் அரசியல் வராலாற்றிலே தான் சார்ந்த சமூகத்தின் அபிவிருத்திக்காக முதன்மையாக உழைத்த அரசியல்வாதிகளின் போற்றப்படவேண்டிய மனிதன் தங்கத்துரை அவர்கள் ஆவர்கள்.
அன்னார் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி என்னும் இடத்தில் பிறந்தார்.தங்கத்துரை அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை திஃகிளிவெட்டி அ.த.க பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தரக்கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார்.பின்னர் 1979-1980 இல் கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியை கற்று சட்டத்தரணியானார். எனினும் அவரது அரசியல் பயணத்தில் 1970 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக்கட்சி சார்பில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார் மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக 1970 இல் 34 வயதில் தெரிவுசெய்யப்பட்ட அ.தங்கத்துரை அப்போது வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் திகழ்ந்தார். அந்த நாள்; தொடக்கம் அவர் இறக்கும் வரை தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான உரிமைக்காகவும் மற்றும் அரசியல் விடிவுக்காகவும்  தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய மாமனிதன் அமரார் தங்கத்துரையாவார். தனது உரிமைக்காக போரடிக்கொண்டிருக்கும் சிறுபான்மை  இனத்தின் மக்கள் பிரதிநிதி எவ்வாறு செயற்படவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செயற்படுத்தியவர்.
குறிப்பாக கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திஇகுடியேற்றம் மற்றும் வீதி அபிருவித்தி பாலங்கள் நிர்மாணம் நீர்ப்பாசனத்துறை சார்;ந்த அபிருத்தி சமூகப்பொருளாதாரத்துறை சார்ந்த அபிவித்திகளை தனது திறமையான தலைமைத்துவத்தின் மூலம் திறம்பட செயற்படுத்தினார் மேலும் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரசதிணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதில் தங்கத்துரை அவர்களுக்கு நிகர் அவர்களே என்னும் அளவிற்கு சிறப்பான முறையில் செய்தார். மூம்மொழியிலும் தேர்ச்சிபெற்றதால் அரசதுறை சார்ந்த எக்காரியத்தையும் இவரால் இலகுவாக செய்ய முடிந்தது. இதனால் பொதுமக்களுடைய பல்வேறு அரசதுறை சார்ந்த காரியங்களை இவரால் நிறைவேற்றிக்கொடுக்கக் கூடியதாக இருந்தது. அமரர் தங்கத்துரை இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் 1970-1977 காலப்பகுதியில் பதவி வகித்துள்ளார். மேலும் தனது சொந்த ஊரான கிளிவெட்டிப்பிரதேசத்தில் சிங்களக்குடியேற்றத்தினை வெற்றிகரமாக தடுத்து மூதூரை பாதுகாக்க எடுத்த முயற்சியின் பயனாக இவர் கைது செய்யப்பட்டு 8 மாதங்கள் சிறையில் இருந்தார்
1981 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் அமோக ஆதரவைப்பெற்று அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். திருகோணமலை மாவட்ட அவிருத்திச்சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட அன்னார் மக்கள் தொண்டனாக திருககோணமலை மாவட்டதமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு சேவை செய்தார்.திருகோணமலை மாவட்ட சமூகப்பொருளாதார கல்வி கலாச்சார அவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழர் விடுதலைக்கூட்டணியினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இவர் தனது திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.இருப்பினும் 1994 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு திருகோணமலை மாவட்டத்தில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப்பெற்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இதன் மூலமாக அவர் தனது சேவைகளை விஸ்தரித்துக்கொண்டார்.குறிப்பாக பாடசாலைகளுக்க பௌதீக வளங்களைப்பெற்று கொடுப்பதில் பாரிய பங்கை மேற்கொண்டது மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் மீள்ச்சிக்கு கல்வியே சிறந்த வழி என முழுமையாக நம்பினார்.சுகாதர சேவையை மேம்பாடுத்தும் முகமாக பல கிராமங்களில் கிராம வைத்தியாசாலைகளை அமைத்தார்.
மேலும் தனது தரிசனப்பார்வையின் மூலமாக சாணக்கியத்தாலும் சிங்களக்குடியேற்றங்களை தடுத்தார். முதலாவதாக தொடர் சிங்கள குடியேற்றம் தமிழ் பகுதிகளில் ஊடுஉருவாது தடுக்கும் முகமாக தங்கபுரம் குமாரபுரம் குடியேற்றங்களை நிறுவி அலிஒலுவ வரை சிங்கள குடியேற்றத்தை மட்டுப்படுத்தினார். இதேபோன்று தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் குடியேற்றம் அமைக்க ஏதுவான காரணிகளை இல்லாது ஒழித்து குடியேற்றத்தை தடுக்க அவர் கிளிவெட்டியில் அமைத்த துணிந்து அழித்த அரசமர சரித்திரம் நாடறிந்த சம்பவமாகும். இதனால் இன்றும் கிளிவெட்டி தமிழ் மணத்துடன் மிடுக்காக மிளிர்வதற்கு வழிசமைத்தார் இவ்வாறு இவர் அமைத்த மிகிந்தபுரம் தொழில்நுட்பகல்லூரியானது திருகோணமலை  மாவட்ட இளம் சமூகம் நீண்டகாலமாக கடற்படைத்தளத்திலும் இலங்கை துறைமுக அதிகாரசபையிலும் கூலித்தொழில்படையாக படையெடுத்த சகாப்த்திற்கு முற்றுப்புள்ளி இட்டதுடன் தொழில் திறன் உடைய தொழில் நிபுணத்துவம் கொண்ட தொழிற்படை உருவாக்கத்திற்கு காரணமானார். மேலும் தொழில்நுட்பகல்லூரி மகிந்தபுரத்தில் உருவாக்கியதன்  மூலமாக அன்புவழிபுரம் வரோதயநகர் பகுதிகளில் சிங்களவர்கள் தொடராக குடியேற முடியாத தடுப்பு சுவராக மாறியுள்ளதை இன்று வியப்பின் விளிப்பில் நின்று பார்க்ககூடியதாக உள்ளது. இதேபோன்று கணேசாநகர் குடியேற்றமும் தனித்சிங்களகுடியேற்றத்தை தடுப்பதோடு பாலையூற்று தமிழ் கிரமாத்தின் தடுப்பு சுவராக அமைந்துள்ளது இவை இவரது தொலைநோக்கையும் ஆற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் பெருமையுடன் பகரும் சான்றுகளாகும்.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் அமைக்கவும் காரணகருத்தாகவும் இருந்ததோடு அதற்கான அமைவிடத்தை தனித்தமிழர் பிரதேசமான நிலாவெளி சாம்பல் தீவு பகுதிகளுக்கிடையிலான கோணெசபுரியில் தெரிவு செய்தமை இவர் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பைகட்டியம் கூறிநிற்கின்றது ஏனெனில் இப்பிரதேசம் நீண்டகாலமாக அடிப்படை வசதியற்ற பகுதியாகவே காண்பபட்டது.இங்கு வளாகம் அமைக்க தொடங்கிய காலம் முதல் தமிழ் மக்களது குடியிருப்புகள் அதிகரித்ததுடன் அடிப்படை தேவையான மின்சாரம் நீர் பாதையமைப்பு என்பன விரைவாக மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது இம்மக்களது வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றமை இத்திட்டத்தின் நீண்டகால பயன்பாடுகளாக அல்லது தாக்கங்களாக (ஐஅpயஉவ) நோக்ககூடியதாக உள்ளது ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த மனமாற்றத்தை (ளுநடக வசயளெகழசஅயவழைn) ஒருதலைவன் எவ்வாறு திட்டமிட்டு மேற்கொண்டார் என்பதற்கு இதை விட ஒரு உதாரணத்தை முன்வைக்க முடியாது என்றே கூறலாம்.



இருப்பினும் தமிழ்தேசியப்போரட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் தங்கள் கண்களை தங்களே குற்றிக்கொண்ட சம்பவங்கள் பல அதில் ஒன்றுதான் அமரார் தங்கத்துரை அவர்களின் மரணமும். இவர் 1997 ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஐந்தாம் திகதி திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டத்திறப்பு விழாவினை தொடர்ந்து கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் போது இக்கல்லூரி அதிபர் திருமதி இராஜஸ்வரி தனபாலசிங்கம் உட்பட 4 புத்திஜீவிகளும் கொலை செய்யப்பட்டார்கள். இம்மாமனிதனின் இடைவெளியை இன்றுவரை திருகோணமலை சார்பான மக்கள் பிரதிநிதிகள் எவரும் நிரப்பவில்;லை என்பது திருகோணமலை வாழ் தமிழ் மக்களின் துரதிஸ்டம் என்றே கூறமுடியும். இதற்கு சிறந்த உதாரணம் சம்பூர் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அவலநிலை குறித்து இது வரையில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதிகளும் காத்திரமான செயற்பாட்டை முன்னெடுக்காது இருப்பதாகும். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் எமது தங்கத்துரை அவர்களின் வழிகோலியே அமையவேண்டும் மேலும் அவர் பெயர் திருகோணமலை தமிழ் சமூகம் வாழும் வரை வாழவேண்டும்.

No comments:

Post a Comment